கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Tuesday, 13 March 2018

JACTTO-GEO

திண்டுக்கல் தமிழ்நாடு உயர்நிலை  மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் TNHHSSGTA மற்றும் ஜாக்டோ ஜியோ
💪💪💪💪💪💪💪💪💪💪
21.2.2018 முதல் சென்னையில் நடைபெற்ற 4 நாட்கள் ஜாக்டோ ஜியோ மறியல் என்பது ஒரு புதிய சரித்திரத்தை படைத்துள்ளது. ஆயிரமாயிரம் அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் கோபாவாசேத்துடன்  பங்கேற்று தனது உரிமைக்குரலை அழுத்தமாக பதிவு செய்துள்ளார்கள். குறிப்பாக நான்காம் நாள் நடைபெற்ற மறியலுக்கு தலைமையேற்ற மகளிர் அணியினரின் போராட்டம் என்பது ஆட்சியாளர்களையும், காவல்துறையையும் கதிகலங்க செய்தது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது நாம் எழுப்பிய கோஷங்கள் கோட்டையை அதிரச் செய்தது என்பது மறுக்க முடியாத உண்மை.
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
 மாணவர்கள் நலன் கருதி நமது போராட்ட வியூகத்தை சற்று மாற்றியமைத்துள்ளோம். வருகிற மே 8 அன்று சென்னை கோட்டையை நோக்கி பல இலட்சம் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஒரு சேர முன்னேற இருக்கிறோம். அதற்கு முன் இந்த அரசிற்கு நமது பலத்தை உணர்த்தும் விதத்தில் வருகிற 24.3.2018 அன்று மாவட்டத் தலைநகரங்களில் மிகப்பெரிய பேரணியை நடத்த மாநில மையம் முடிவாற்றியுள்ளது. மாநில முடிவினை அமுல்படுத்துவதில் முதன்மை மாவட்டமாக செயல்படும் நாம், நமது மாவட்ட பேரணியை எழுச்சியோடு பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை திரட்டி நடத்திட ஏதுவாக ஆசிரியர்களிடம் சந்திப்பு நடத்தி அனைத்து ஆசியர்களையும் பேரணிக்கு அழைத்து வர இன்றே வட்டார மாவட்ட  பொறுப்பாளர்கள், ஆயத்தப்பணியை தொடங்க மாவட்டக்கழகம் கேட்டுக்கொள்கிறது
இவண்
மு.முருகேசன்   -   மாநில செய்தி தொடர்பாளர்
திரு.செல்மா பிரியதர்சன்  -   மாவட்டச்செயலாளர்
திரு. பிரான்சிஸ் பிரிட்டோ  -   பொருளாளர்
திரு.ஜெகதீஸ்குமார்  -    தலைமை நிலைய செயலாளர்
TNHHSSGTA
திண்டுக்கல்

No comments:

Post a Comment