கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Sunday, 25 March 2018

CPS பாடல்

CPS பாடல்



எங்கே தேடுவேன்
எங்கே தேடுவேன் - என்
 CPS பணத்தை 1
 எங்கே தேடுவேன் -நான்

கூவத்தூரில் மயங்கி போனாயோ
கூவம் நதியில் மூழ்கி விட்டாயோ
அய்யோ! எங்கே தேடுவேன் - என்
 CPS பணத்தை -
 எங்கே

கார்ப்பரேட் வலையில் மாட்டிக் கொண்டாயோ!
கருப்பு ஒழிப்பென பயந்து விட்டாயோ!
அய்யோ எங்கே தேடுவேன்
என் CPS பணத்தை - எங்கே

ஆற்று மணலில் மாட்டிக் கொண்டாயோ!
சுவற்றுக்குள் பூசி மறைந்தாயோ!
அய்யோ எங்கே தேடுவேன்
என் CPSபணத்தை - எங்கே

கூட்டு சதியில் சிக்கிக் கொண்டாயோ!
பூட்டு போட்டு பூட்டிக் கொண்டாயோ!
அய்யோ எங்கே தேடுவேன்
என் CPS  பணத்தை
எங்கே

தேவை எமக்கென நம்பி வைத்தோமே!
யாருக்கு சேவை செய்ய கிளம்பி சென்றாயோ!
அய்யோ எங்கே தேடுவேன்- என்
 CPS  பணத்தை - எங்கே

உலக சந்தைக்கு உடன் சென்றாயோ!
உலவும் சுகத்தை அனுபவிக்கின்றாயோ
அய்யோ எங்கே தேடுவேன்  -  என்
 CPS  பணத்தை - எங்கே

கண்டெய்னரில் நீயும் களம் புகுந்தாயோ!
கண்டவன் கையில் சிக்கிக் கொண்டாயோ,
அய்யோ எங்கே தேடுவேன்
என் CPS பணத்தை
எங்கே..

சுருட்டும் கடனில் தள்ளுபடி யானாயோ!
சுவிஸ் வங்கியில் சுருண்டு கொண்டாயோ!
அய்யோ எங்கே தேடுவேன்
என் CPS  பணத்தை
எங்கே...

எம் லோகத்தில் கட்டிய பணத்தை, 
எம லோகத்தில் வந்து தேடுவேனோ!
அய்யோ எங்கே தேடுவேன்
அய்யா,
என் CPS  பணத்தை
எங்கே தேடுவேன்,
என் CPS பணத்தை
எங்கே தேடுவேன்??????

ஆவடி பா.குப்புராஜ்
TNHHSSGTA-

No comments:

Post a Comment