கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Tuesday, 6 March 2018

பட்டதாரி ஆசிரியர்களின் காவலர் திரு.மாயவன் அவர்களின் பிறந்தநாள்

பட்டதாரி ஆசிரியர்களின் காவலர் திரு.மாயவன் அவர்களின் பிறந்தநாள் 




தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் ......................................................நிறுவனத் தலைவர் மதிப்புமிகு : அ.மாயவன் Ex.MLC....................................................... பிறந்தநாள் வாழ்த்து 💐💐💐💐💐💐💐💐💐 07.03.2018 இன்று என்தலைவனுக்கு பிறந்தநாள் - ஆம் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் - என்னும் மாபெரும் இயக்கத்தை தோற்றுவித்து - அதனை இன்றளவும் கட்டிக் காத்திடும் என் தலைவர் நிறுவனத் தலைவர் மதிப்புமிகு அ.மாயவன் Ex.MLC அவர்களுக்கு - இன்று பிறந்தநாள். பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களின் நலன் காத்திட அவர்களின் உரிமைகள் பாதுகாத்திட அவர்களுக்கென - தனி அமைப்பு வேண்டும் - என்று குரல் கொடுத்து - அதில் வெற்றியும் கண்டு தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் - என்ற அமைப்பை நிறுவி _ இன்றளவும் போற்றி காத்திடும் பட்டதாரி ஆசிரியர்களின் பாதுகாவலர் மதிப்புமிகு அ.மாயவன் Ex.MLC அவர்களுக்கு _ இன்று பிறந்தநாள். பதவிகளை தான் தேடிச்செல்லாமல் தன்னை தேடிவரும் பதவிகளை - எல்லாம் அலங்கரித்து மகுடம் சூட்டிடும் வகையில் செயலாற்றிடும் அகில இந்திய ஆசிரியர் கூட்டமைப்பின் (STFl) அகில இந்திய துணைத்தலைவர் மதிப்புமிகுஅ.மாயவன் Ex.MLC அவர்களுக்கு - இன்று பிறந்தநாள். ஈரோடு மண்ணிலே ஜேக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் நடுவீதியிலே - தவிக்கவிட்டு சென்ற போது கலங்காதே நண்பர்களே நான் இருக்கிறேன் - நாம் ஒன்றிணைந்து போராடுவோம் - எனக்கூறி ஜேக்டோ-ஜியோவிற்கு தலைமையேற்று பல கட்டப் போராட்டங்களை களம் கண்டு வெற்றியும் கண்டு ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் 7-வது ஊதிய விகிதம் பெறக்காரணமாக - இருந்த போராளி மதிப்புமிகு அ.மாயவன் Ex.MLC அவர்களுக்கு - இன்று பிறந்தநாள். மாற்று இயக்கத்தாரையும் மதிக்கும் மாண்பை நமக்கு கற்றுத்தந்த நல்ஆசான் மதிப்புமிகுஅ.மாயவன் Ex.MLC அவர்களுக்கு _ இன்று பிறந்தநாள். தன் வசீகர பேச்சினால் அனைவரையும் ஈர்த்திடும் - வல்லமை கொண்ட _ என் தலைவன் மதிப்புமிகு அ.மாயவன் Ex.MLC அவர்களுக்கு - இன்று பிறந்தநாள். பொது வாழ்வில் கரைபடியாத - தன் தூய கரங்களுக்கு சொந்தகாரர்- அதனால் இன்றும் அதிகாரிகளுக்கெல்லாம் சிம்மசொப்பனமாக திகழ்ந்து கொண்டிருக்கும் தூயவன் மதிப்புமிகு அ.மாயவன் Ex.MLC அவர்களுக்கு - இன்று பிறந்தநாள். பட்டதாரி ஆசிரியர்களுக்கென தன் வாழ்க்கையையே தியாகம் - செய்த தியாகச்செம்மல் மதிப்புமிகு அ.மாயவன் Ex.MLC அவர்களுக்கு - இன்று பிறந்தநாள். இந்த நல்லநாளில் அவர் நீண்ட ஆயுளையும் நல்ல உடல் நலனையும் திடமான உள்ள வலிமையும் பெற்று பல நூறு ஆண்டுகள் வாழ்ந்து நம்மையெல்லாம் சிறப்பாக - வழிநடத்திட வேண்டும் - என்று வாழ்த்துகிறேன் உம்மை வணங்குகிறேன் - என் தலைவா. 💐💐💐💐💐💐💐💐💐 இவண் என்றும் தங்கள் வழிப்பாதையில் ...... 📌உம் அருமை உடன்பிறப்புகள

No comments:

Post a Comment