கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Sunday, 25 March 2018

*ஜேக்டோ ஜியோ -திண்டுக்கல்முருகேசன்.

CPS 

உங்களில் ஒரு சகோதரனாய் உங்களிடம் சில வினாக்கள் கேட்கிறேன்.
இதற்கு ஆம் அல்லது இல்லை என்று மட்டும் பதில் கூறவும்.

வினாக்கள்:

1. 58 வயதிற்குப் பின் உயிர் வாழக்கூடாது என்ற எண்ணம் கொண்டவரா நீங்கள்?

2. 58 வயதிற்குப் பின் தன்மானம் கொண்டவராய் வாழக்கூடாது என எண்ணுபவரா நீங்கள் ?

3. வெயிலை வெறுப்பவரா நீங்கள்?

4. நமக்காகச் சிலர் மட்டும் போராடட்டும். நான் நிழலிலே நின்று கனிகளை மட்டும் புசிப்பேன் என நினைப்பவரா நீங்கள்?

5. 24.03.18 அன்று எனக்கு வேலைகள் பலவுண்டு. நான் 
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் (பழைய கோர்ட் பின்புறம் காலை 10 மணி) ஏன் வர வேண்டும் என நினைப்பவரா நீஙக?

6.5 வருடம் M .L. A வாக இருப்பவர்க்குக் கூட ஓய்வூதியம் உண்டு. நீங்கள் பல ஆண்டுகள் உழைத்தும் ஒய்வூதியம் இல்லை எனும் நிலையில் இன்பம் காண்பவரா நீங்கள்?.

7. காவல் துறையில் பணியாற்றும் மோப்ப நாய்களுக்குக் கூட ஓய்வூதியம் உண்டு. நம்மை விட மோப்ப நாய்களே சிறந்தவை என நினைப்பவரா நீங்கள்? 

8. நமக்கென்ன! மாதமானால் சம்பளம் வருகிறதே பிறகு எதற்குப் பேரணி , போராட்டம் என்று எண்ணுபவரா நீங்கள்?.

9. சலுகைகள் பெற்றுத் தர சங்கங்கள் உண்டு. பிறகு நான் ஏன் வெயிலில் நின்று உடல் நலனைக் கெடுத்துக் கொள்ள வேண்டுமென்று உடல் நலனில் சுய அக்கறை கொண்டவரா நீங்கள்?

10. உண்ணாவிரதம், மறியல், ஆர்ப்பாட்டம், உள்ளிருப்புப் போராட்டம், தொடர் வேலை நிறுத்தம் என பல விதமாக நாம் போராடினாலும் நம்மைக் கண்டு கொள்ளாது இருக்கும் இந்த அரசைப் போல் தன்னலம் கொண்டவரா நீங்கள்?

11. இப்போது நாம் பெறும் ஊதியம் கூட நமது முன்னோடிகள் சிந்திய வியர்வையில் விளைந்த கனியென்பதை நினைத்துப் பார்க்கக் கூட முடியாத கல் நெஞ்சம் கொண்டவரா நீங்கள்?

12. போராடுவது எப்படி என நம்மிடம் போராட்டங்களைக் கற்றுக் கொண்ட நம் மாணவர்கள் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் ஒன்று பட்டு போராடியதால் வெற்றி பெற்ற வீர வரலாற்றினை அறியாதவர்களா நீங்கள்?


மேற்கண்ட அனைத்து வினாக்களுக்கும் இல்லை என மனசாட்சிப்படி விடையளித்தால் நீங்களும் என் சகோதர , சகோதரிகளே.

பிறகென்ன தயக்கம்?
ஏனிந்த அச்சம்?
அச்சத்தை விடுங்கள்.
ஜேக்டோ ஜியோ பேரணியில் இணையுங்கள்.

பேரணியைப் போர்க்களமாக்குவோம்.
நமது ஒற்றுமையைக் கேடயமாக்குவோம்.
வாருங்கள்! வாருங்கள்! வந்து நம் கரங்களுக்கு வலு சேருங்கள்.

நாள் : 24.03.18

இடம்:திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் (பழைய கோர்ட் பின்புறம்)

நேரம் : காலை 10 மணி

ஒன்று படுவோம்
வெற்றி பெறுவோம்

. . . . . . . இவண்
போராட்ட உணர்வுடன்,
*ஜேக்டோ ஜியோ 
திண்டுக்கல் மாவட்டம்
 *
மு.முருகேசன். *

மாநில செய்தி தொடர்பாளர்**

No comments:

Post a Comment