கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Thursday, 29 March 2018

திண்டுக்கல் *மு.முருகேசன்* மாநில செய்தி தொடர்பு செயலாளர் -29.03.2018 வியாழக்கிழமை


திண்டுக்கல் *மு.முருகேசன்* மாநில செய்தி தொடர்பு செயலாளர் தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் (நிறுவனர்: *அ.மாயவன் Ex.MLC* அவர்கள்

29.03.2018
வியாழக்கிழமை
==============
🍎🍎இளையோர் - மூத்தோர் ஊதிய முரண்பாடு மாவட்ட மாறுதலில் / ஒன்றிய மாறுதலில் வந்த ஆசிரியருக்கும் வழங்கலாம் - சென்னை உயர்நீதிமன்றம் - மதுரைக் கிளை - தீர்ப்பாணையின் நகல்

🍎🍎Treasuries and Accounts- Working day form PAOs/Treasuries for Sattlement on 31.03.2018-orders requesting of-Regarding

🍎🍎அரசு ஊழியர்கள் தமிழை பயன்படுத்த வேண்டும்!!!---அமைச்சர் பாண்டியராஜன்

🍎🍎தமிழரின் தலைமையில் ஏவப்படும் முதல் ராக்கெட்

🍎🍎PGTRB - இல் இட ஒதுக்கீடு அரசின் கொள்கை முடிவு என ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம்

🍎🍎Treasury : 31ம் தேதி வேலை நாள் - Proceedings_

🍎🍎தேர்வு துவங்க 6 நிமிடமே உள்ள நிலையில் தவித்த மாணவனுக்கு போலீஸாரின் சமயோசித உதவி: பள்ளியே திரண்டு பாராட்டு

🍎🍎தந்தை இறந்த துக்கத்திலும் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி!

🍎🍎பள்ளி ஆசிரியராக பணிபுரியும் "ரோபோ

🍎🍎65 சதவீத மாணவர்களுக்கு தமிழில் எழுத படிக்க தெரியவில்லை:-கலெக்டர் வேதனை!!

🍎🍎ஏற்கனவே அறிவித்ததைவிட கூடுதலாக 20 ஆயிரம் பணியிடங்கள்:-ரெயில்வே துறை அறிவிப்பு!!!

🍎🍎6முதல் 9 வகுப்புகளுக்கான‌ மூன்றாம் பருவத் தேர்வு குறித்து முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் மற்றும் திருத்திய கால அட்டவணை வெளியீடு!!!

🍎🍎மக்களுக்கு முக்கியச் செய்தி: வங்கிகள் செயல்படும் நேரம் அதிகரிப்பு!

🍎🍎சிபிஎஸ்இ 10ம் வகுப்பு கணிதம், 12ம் வகுப்பு பொருளாதார பாடத்துக்கு மறுதேர்வு நடத்தப்படும் என அறிவிப்பு!!!

🍎🍎2016-17 கல்வியாண்டில் நடைபெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்- அரசாணை எண் 110ன் படி இடஒதுக்கீடு செயல்படுத்தாது பற்றி ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம்!!!

🍎🍎குப்பையாக்கப்பட்ட கணினி பாடபுத்தகம் RTI தந்த அதிர்ச்சி தகவல்.

🍎🍎சிபிஎஸ்இ வினாத்தான் திருட்டு தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: பிரகாஷ் ஜவடேகர்

🍎🍎அரசுப்பள்ளியில் புதிய பாடத்திட்டம்: ஆசிரியர்களுக்கு 10 நாட்கள் பயிற்சி.

📌குறள் எண்: 754 / பொருட்பால் / பொருள்செயல்வகை

அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்

ஈட்டும் வகை அறிந்து எவருக்கும் தீங்கு செய்யாமல் நேர்மையாக வந்த செல்வம் ஒருவனுக்கு அறத்தையும் கொடுக்கும்; இன்பத்தையும் கொடுக்கும்.

Their wealth, who blameless means can use aright, Is source of virtue and of choice delight. The wealth acquired with a knowledge of the proper means and without foul practices will yield virtue and happiness.

திண்டுக்கல் *மு.முருகேசன்* மாநில செய்தி தொடர்பு செயலாளர்-28.03.2018 புதன்கிழமை


28.03.2018 புதன்கிழமை

திண்டுக்கல் *மு.முருகேசன்*
மாநில செய்தி தொடர்பு செயலாளர்
தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்
(நிறுவனர்: *அ.மாயவன் Ex.MLC* அவர்கள்)

⚫⚫பென்சன் வாங்கும் அரசு ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் பென்சன் நிறுத்தம்!!!

⚫⚫நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த கருத்துரு அனுப்பக்கோரல்- பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்

⚫⚫கடலூரில் சீர் கொடுத்து மாணவர்கள் சேர்க்கைக்கு அழைப்பு : அரசு பள்ளி ஆசிரியர்கள் அசத்தல்

⚫வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் ஏப்ரல் 1 முதல் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பம் பெறப்படும்: ஆணையர் தகவல்

⚫⚫பேஸ்புக், டுவிட்டரில் கருத்து சொல்பவர்களை கைது செய்யும் சட்டம் ரத்து - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு

⚫⚫31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன்  உத்தரவு

⚫⚫இந்த ஆண்டு பணிநியமனம் நடைபெறுமா?-அன்புமணி ராமதாஸ் நடப்பாண்டில் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட மாட்டார்கள் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

⚫⚫சீக்கிய மதகுருவான குரு கோவிந்த் சிங்கின் 350ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ரூ.350 நாணயம் வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

⚫⚫பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்குவிக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்

⚫⚫பான் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு : ஜூன் 30 வரை நீட்டிப்பு.

⚫⚫புதிய ரூ.350 நாணயம்: ஆர்பிஐ அறிவிப்பு

⚫⚫பான் எண்ணுடன் ஆதார் எண்  இணைப்பு : ஜூன் 30 வரை  நீட்டிப்பு

⚫⚫G.O Ms.No. 202 Dt: March 26, 2018 -Public Holidays for the year 2018 - Public Holiday for all Commercial Banks and Co-operative Banks on 01.04.2018 (Sunday) - Cancelled and declared on 02.04.2018 (Monday) - Orders issued

⚫⚫Income Tax Offices to remain open on 29th, 30th and 31st March, 2018

⚫⚫ஆசிரியர்களுக்கு 15 சதவீதம் வரை கூடுதலாக தேர்வு பணி ஊதியம் உயர்வு கிடைக்கும்

⚫⚫பிளஸ் 1 மாணவர்களை கதற வைத்தது பொருளியல் : இளைப்பாறுதல் தந்தது இயற்பியல்

📌குறள் எண்: 272 / அறத்துப்பால் / கூடாவொழுக்கம்

வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்
தான்அறி குற்றப் படின்

தன் நெஞ்சமே குற்றமென்றறிந்ததை ஒருவன் செய்வானாகில், அவனது வானளாவ உயர்ந்த தவக்கோலம் என்ன பயன் செய்யும்?

What gain, though virtue's semblance high as heaven his fame exalt, If heart dies down through sense of self-detected fault?. What avails an appearance (of sanctity) high as heaven, if his mind suffers (the indulgence) of conscious sin.

Monday, 26 March 2018

NEW RENUMERATION G.O

பட்டதாரி ஆசிரியர் களின் பாதுகாவலன் அ.மாயவன் அவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக உள்ளூர் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு தொகுப்பு படி வழங்கவேண்டும் என்று போராடிவந்தார்....கடந்த ஆண்டு கேட் மீட்டிங்கில் உள்ளூர் ஆசிரியர்களிடம் உங்களுக்கு தொகுப்பு படி வாங்கி தராவிட்டால் சட்டையை பிடித்து கேளுங்கள் என்றார்....இன்று சங்கம் சாதித்திருக்கிறது....

இந்த வெற்றிக்கு தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகமே..... என மார் தட்டி சொல்லுவோம்....




TNHHSSGTA NEWS
விடைத்தாள் திருத்த வழங்கப்படும் உழைப்பூதியம்,மதிப்பூதியத்தை உயர்த்த இயக்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள்
👉🏻 GATE MEETING நடைபெற்றபோது உள்ளூர் ஆசிரியர்களுக்கு பயணப்படி வழங்க இயக்கம் முழு முயற்ச்சி எடுக்கும் என நிறுவனத்தலைவர் அ.மாயவன் வாக்குறுதி
👉🏻 தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக இயக்குநர்,இ.இயக்குநர் சந்திப்பு
👉🏻 உழைப்பூதியம் ,மதிப்பூதியம்,உள்ளூர் ஆசிரியர்களுக்கு பயணப்படி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திவிடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு செய்த ஒரே இயக்கம் TNHHSSGTA மட்டுமே என்பதை அனைவரும் அறிவர்
👉🏻 கண்டன ஆர்ப்பாட்டம் போன்றவற்றை நடத்தி கடைசியாக கடந்த ஜனவரியில் இயக்கம் தேர்வுத்துறை இயக்குநரிடம் விரைவில் அரசாணையை வெளியிட வலியுறுத்தியது





















.

Sunday, 25 March 2018

கவிஞர் செல்மா பிரியதர்சன் ....

கவிஞர் செல்மா பிரியதர்சன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

நமது பேரியக்கத்தின் TNHHSSGTA  திண்டுக்கல் மாவட்ட செயலாளர்  மற்றும் நமது இயக்கத்தின் போர்வாள் திரு .செல்மா பிரியதர்சன் அவர்களின் இலக்கிய பணி சிறக்க வாழ்த்துக்கிறது-----------  TNHHSSGTA  திண்டுக்கல்

திண்டுக்கல் மு.முருகேசன்-----ஜாக்டோ- ஜியோ நிறைவுரை


திண்டுக்கல் மு.முருகேசன் 
மாநில செய்தி தொடர்பு செயலாளர்
தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்
(நிறுவனர்: அ.மாயவன் Ex.MLC அவர்கள்)

ஜாக்டோ- ஜியோ நிறைவுரையில் ஊதிய கமிஷன் நிறைவேறியதற்க்கு முதற்காரணம் எந்த எதிர்பார்ப் பும் இன்றி போராட்ட களத்தை அலங்கரித்த அங்கன்வாடி சகோதரிகள் மற்றும் சத்துணவு அமைப்பாளர்களே.....

காத்திருப்பு போராட்டத்திலும் மழையிலும் குளிரிலும் பாட்டு ஒப்பாரி கும்மி நடனம் என்று எல்லாவற்றிலும் இறங்கி அதிக அளவில் பங்குபெற்றதால் தான் இன்று நாங்கள் கை நிறைய ஊதியம் பெருக்கின்றோம் என்றேன்..... அவர்களும் ஊதியமுரண்பாட்டின் மூலம் நல்ல ஊதியம் கிடைக்க இந்த அமைப்பு கடைசி வரை பாடுபடும் என்றேன்....

திண்டுக்கல் மு.முருகேசன்-----ஜாக்டோ- ஜியோ நிறைவுரை





ஊடக செய்திகள்

நேற்றைய பேரணியில் மாவட்ட த்தலை நகரங்களை ஸ்தம்பிக்க வைக்க களப்பணியாற்றிய அனைத்து தொழிற்சங்க பொறுப்பாளர்களுக்கும் .கலந்து கொண்ட அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்- அ.மாயவன் நிறுவனத்தலைவர் TNHHSSGTA

ஊடக செய்திகள்


- அ.மாயவன் நிறுவனத்தலைவர் TNHHSSGTA

இன்று சென்னை மாவட்ட ஜாக்டோ ஜியோ ஆயத்தப்பேரணியில்
அ.மாயவன் நிறுவனத்தலைவர் TNHHSSGTA





முருகேசன் ,மாநில செய்தி தொடர்பு செயலாளர் , TNHHSSGTA., திண்டுக்கல்

TNHHSSGTA- திண்டுக்கல்
 நன்றி...நன்றி...
கொழுத்தும் வெயிலிலும் செருப்பில்லாமல்  ஊர்வலத்தில் நடந்துவரும் சகோதரி.போராட்டத்தில் கலந்துகொண்ட சகோதர-சகோதரிகளே நீங்கள் வரலாற்றில் தடம் பதித்துவிட்டீர் ...              CPS ஒழியும் வரை,ஊதிய முரண்பாடு களையும்வரை ,காலமுறை ஊதியம் பெறும் வரை,21 மாத நிலுவைபெறும் வரை போராட்டம் ஓயாது தயாராவோம் கோட்டை முற்றுகைக்கு





கடும் வெயிலின்
தாக்கத்திற்கும்
இடையிலும்

இடைவெளியே
இல்லாது பயணித்த
போர்ப்படை
வீரர்களைப் போல்

பேரணியில்
தங்களை
முழுமையாக
ஈடுபடுத்தி

தமிழக அரசுக்கு
எச்சரிக்கை
முரசு கொட்டிய

என்
இனமான
இயக்கத் தோழர்கள்
அனைவருக்கும்
மாவட்ட மையத்தின்
சார்பில்
நெஞ்சார்ந்த
நன்றிகள்.
தோழமையுடன்
முருகேசன் ,மாநில செய்தி தொடர்பு செயலாளர் , TNHHSSGTA., திண்டுக்கல் 

TNHHSSGTA பொறுப்பாளர்கள் போராட்ட பூமி திண்டுக்கல்

ஜாக்டோ -ஜியோ  பேரணியில்  நமது   திண்டுக்கல் TNHHSSGTA  பொறுப்பாளர்கள்















CPS பேரணி - போராட்ட பூமி திண்டுக்கல் மாவட்டம்

CPS பேரணி  - போராட்ட பூமி  திண்டுக்கல் மாவட்டம் -TNHHSSGTA










CPS பாடல்

CPS பாடல்



எங்கே தேடுவேன்
எங்கே தேடுவேன் - என்
 CPS பணத்தை 1
 எங்கே தேடுவேன் -நான்

கூவத்தூரில் மயங்கி போனாயோ
கூவம் நதியில் மூழ்கி விட்டாயோ
அய்யோ! எங்கே தேடுவேன் - என்
 CPS பணத்தை -
 எங்கே

கார்ப்பரேட் வலையில் மாட்டிக் கொண்டாயோ!
கருப்பு ஒழிப்பென பயந்து விட்டாயோ!
அய்யோ எங்கே தேடுவேன்
என் CPS பணத்தை - எங்கே

ஆற்று மணலில் மாட்டிக் கொண்டாயோ!
சுவற்றுக்குள் பூசி மறைந்தாயோ!
அய்யோ எங்கே தேடுவேன்
என் CPSபணத்தை - எங்கே

கூட்டு சதியில் சிக்கிக் கொண்டாயோ!
பூட்டு போட்டு பூட்டிக் கொண்டாயோ!
அய்யோ எங்கே தேடுவேன்
என் CPS  பணத்தை
எங்கே

தேவை எமக்கென நம்பி வைத்தோமே!
யாருக்கு சேவை செய்ய கிளம்பி சென்றாயோ!
அய்யோ எங்கே தேடுவேன்- என்
 CPS  பணத்தை - எங்கே

உலக சந்தைக்கு உடன் சென்றாயோ!
உலவும் சுகத்தை அனுபவிக்கின்றாயோ
அய்யோ எங்கே தேடுவேன்  -  என்
 CPS  பணத்தை - எங்கே

கண்டெய்னரில் நீயும் களம் புகுந்தாயோ!
கண்டவன் கையில் சிக்கிக் கொண்டாயோ,
அய்யோ எங்கே தேடுவேன்
என் CPS பணத்தை
எங்கே..

சுருட்டும் கடனில் தள்ளுபடி யானாயோ!
சுவிஸ் வங்கியில் சுருண்டு கொண்டாயோ!
அய்யோ எங்கே தேடுவேன்
என் CPS  பணத்தை
எங்கே...

எம் லோகத்தில் கட்டிய பணத்தை, 
எம லோகத்தில் வந்து தேடுவேனோ!
அய்யோ எங்கே தேடுவேன்
அய்யா,
என் CPS  பணத்தை
எங்கே தேடுவேன்,
என் CPS பணத்தை
எங்கே தேடுவேன்??????

ஆவடி பா.குப்புராஜ்
TNHHSSGTA-

TNHHSSGTA திண்டுக்கல். JACTTO-GEO


💪💪💪💪💪💪💪💪தோழர்களே! வணக்கம்.
நாளை ( 24.3.18) சனிக்கிழமை காலை 10 மணியளவில் JACTTO-GEO சார்பில் நடைபெறும் மாநில ந் தழுவிய மாபெரும் எழுச்சிப் பேரணியில் கலந்து கொண்டு நமது உரிமையை மீட்டெடுக்கும் கடமையை செய்யுமாறு அன்புடன் அழைக்கிறோம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

CPS ஒழிப்பு, முதுகலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைதல், 21 மாத நிலுவைத் தொகையை வழங்குதல் உள்ளிட்ட பிரதான கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் நமது மாபெரும் பேரணியை வெற்றி பெறச் செய்வது நம் ஒவ்வொரு ஆசிரியர்களின் பொறுப்பு மிகுந்த கடமையாகும்.
💪💪💪💪💪💪💪💪
CPS சைஒழித்து GPF -யை நடைமுறைப்படுத்துமாறு செய்வது நம் இறுதி வாழ்க்கையை உறுதி செய்யும் தார்மீகக் கடமையாகும் தோழர்களே' தோள் சேர்ந்து பேரணியை வலுப்படுத்துவோம் நாம் தொடர்ந்த கோரிக்கைகளை வென்றெடுப்போம் வாரிர் தோழர்களேl
🙏🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻
நமது பணித் தொகுதிக்கு இழைத்த ஊதிய முரண்பாட்டு அநீதியை உடைத்தெறிய ஓரணியில் ஒன்று பட்டு உறுதியோடு களம் காணுவோம் வாரீர் தோழர்களே' .
👊👊👊👊👊👊👊👊
நாமிழந்த 21 மாத  ஊதிய நிலுவைத் தொகையை ஒரு பைசா கூட குறைவில்லாமல் திரும்பப் பெற்றிட ஊக்கத்தோடு வந்து பெருந்திரளான பேரணியில் கைகோர்த்து நமது வலிமையை காட்டுவோம் வாரீர் தோழர்களே!
💪💪💪💪💪💪💪
தொகுப்பூதியம் மற்றும் தற்கால பணியிடங்களை ஒழித்து நமது வருங்கால இளைஞர் களுக்கு நிரந்தரப் பணியிடங்களைக் கட்டி அமைத்திடுவோம் அணிதிரண்டு வாரீர் தோழர்களே'
🤝🏼🤝🏼💪💪💪💪💪💪
நமது கோரிக்கைகளின் அவசியத் தன்மையை உணர்ந்து இன்றைய கெளரவத்தை காத்திடவும், எதிர்கால வாழ்க்கையை உறுதி படுத்திடவும், திரளான பேரணியில் தவறாமல் கலந்து கொண்டு கடமையாற்ற அழைக்கின்றோம் கடலென அணிதிரண்டு வாரீர்! வாரீர்!
💐💪💪💪🤝🏻🤝🏻🤝🏻🤝🏻👊🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍

போராட்ட உணர்வுடன்
TNHHSSGTA   திண்டுக்கல்.     JACTTO-GEO

ஜாக்டோ-ஜியோ பேரணி அழைப்பிதழ்

அனைவரும்..
வாரீர்!! வாரீர்!!
🤝🤝🤝🤝🤝🤝🤝
நாளை(24-03-2018) திண்டுக்கல் மாவட்டம், ஜாக்டோ-ஜியோ இயக்கம் சார்பில் நடைபெரும் மாபெரும் பேரணிக்கு  - அனைத்து இருபால் ஆசிரியர்களிடம் அழைப்புவிடுத்த மகிழ்ச்சியான தருணம்..

🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
போராட்ட உணர்வுடன்
 TNHHSSGTA----திண்டுக்கல்.    JACTO GEO
திண்டுக்கல் மாவட்டம்