கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Saturday, 7 April 2018

TNHHSSGTA வாழ்த்துக்கள்


தங்கம் வென்ற தமிழன் 

 TNHHSSGTA திண்டுக்கல் மாவட்ட கழகம் சார்பில் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் 
Image result for satish sivalingam tamil nadu














Image result for sathish sivalingam






கோல்ட் கோஸ்ட்டில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் 3வது தங்கப்பதக்கத்தை வென்றார் வலுதூக்கும் வீரர் சதீஷ்குமார் சிவலிங்கம்.


77 கிலோ உடல் எடைப்பிரிவில் மொத்தம் 317 கிலோ எடைதூக்கி தங்கம் வென்று சாதனை படைத்து தமிழகத்துக்குப் பெருமை சேர்த்துள்ளார் வேலூரைச் சேர்ந்த சதீஷ் சிவலிங்கம்.
25 வயது சதீஷ் சிவலிங்கம் 4 ஆண்டுகளுக்கு முன்பாக கிளாஸ்கோவில் இதே எடைப்பிரிவில் தங்கம் வென்றதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் கிளாஸ்கோவில் இவர் மொத்தம் 328 கிலோ எடைத்தூக்கினார். ஸ்னாட்சில் 149 கிலோவும் கிளீன் அண்ட் ஜெர்க்கில் அப்போது 179 கிலோவும் தூக்கினார்.
ஆனால் இம்முறை ஸ்னாட்சில் 144 கிலோ மட்டுமே தூக்கினார். ஆனால் கிளீன் அண்ட் ஜெர்க்கில் 173 கிலோ தூக்கி தங்கப்பதக்கத்தை உறுதி செய்தார்.
இதுவரை காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா 3 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் வென்றுள்ளது. 

No comments:

Post a Comment