இனிய பட்டதாாி ஆசிாிய பெருமக்களே
மிகப் பெரிய மாற்றத்தையே புரட்சி என்கிறாா்கள்
உலக வரலாற்றில் எந்த ஒரு புரட்சியும் மாற்றமும் ஒரு நாளிலோ ஒரே முயற்சியிலோ கிடைத்து விடுவது இல்லை . கிடைக்க செய்ய பலரின் தன்னலமற்ற முயற்சியும் , பெரும் எண்ணிக்கை கொண்ட மக்கள் திரட்சி திரட்டி நடத்தபடும் போராட்டங்களும் தேவைபடுகிறது
நமது முன்னோர்கள் தங்களுடைய தொடர் முயற்சியால் காவல் , வருவாய்துறைக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த ,
பயன் அளிக்கும் ஓய்வூதிய திட்டத்தை.
1960 களுக்கு பிறகு ஆசிாியா்களுக்கும் தங்களின் அயராத போராட்ட குணத்தின் மூலம் பெற்று தந்து இருக்கிறாா் தன்னலமற்ற மூத்த தோழர்கள்
ஆதனால் பெற்ற பெண்ணையும் , son ஐயும் கூட இறுதி காலத்தில் நம்பி வாழ வேண்டிய அவசியம் இல்லாமல் பென்ஷனை நம்பி இறுதி காலத்தை கழித்தாா்கள் ,.கழித்தும் வருகிறாா்கள்
2003 பிறகு நியமனம் பெற்றவர்களுக்களுக்கு
பென்சன் இல்லை
கமுட்டேசன் இல்லை
கிரஜூட்டி இல்லை
நாம் அதற்கு முன்பு நியமனம் பெற்று விட்டோமே என இருந்து விடலாமா ?
CPS உள்ளவர்களே போராட்டங்களுக்கு வரமாட்டோம் என இருக்கிறாா்கள்.நான்.ஏன் போக வேண்டும் ? என்கிற உங்கள் கோபப்படுவதிலும் நியாயம் இல்லாமல் இல்லை
நம் எதிர்கால சந்ததிகளுக்காக
நம் வீட்டு பிள்ளைகளுக்காக
இளைய தலைமுறை ஒருங்கிணைத்து போராட்டங்களத்துக்கு கொண்டு வாருங்கள்
சக்தி வாய்ந்த ஒற்றுபட்ட மே 8
போராட்டம் மட்டுமே நம் தலைமுறையையும்
எதிர்கால தலைமுறையுையும் பாதுகாக்கும்
★ மாணவர் எண்ணிக்கை குறைவு என காரணம் ஆசிாியா்கள் பணி நிரவல்
*பணியிடங்கள் குறைப்பு
*
பதவி இறக்கம்
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இன்மை
ஏழை எளியவர்கள் பயிலும் அரசு பள்ளிகளின் பாதுகாப்பு
என்கிற பொதுநலமும் தன்னலமும் கலந்த போராட்டத்தில் தனது பங்களிப்பினை செய்ய மே 8 சென்னை கோட்டை முற்றுகை போராட்டத்திற்கு ஆசிாியா்களை திரட்ட
பள்ளி அளவில்
வட்ட அளவில்
திட்டமிடல் கூட்டங்களை நடத்தி வாகன.ஏற்பாடு பயணத்திட்டங்களை வகுத்திட வேண்டும்
காலம் குறைந்து விட்டது விரைந்து பணியாற்ற வேண்டிய காலமிது உணர்ந்து செயல்படுவோம்.
வெற்றி நமதே
அ.மாயவன் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்
திண்டுக்கல் மு.முருகேசன் மாநில செய்தி *தொடர்பு செயலாளர்
No comments:
Post a Comment