கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Monday, 30 April 2018

அ.மாயவன் ஒருங்கிணைப்பாளர் ஜாக்டோ -ஜியோ

அ.மாயவன் ஒருங்கிணைப்பாளர் ஜாக்டோ -ஜியோ
✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻
20.4.18 அன்று நாம் நடத்திய ஆர்ப்பாட்டம். சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் மாண்புமிகு கிருபாகரன் அவர்களால் கடந்த 7 மாதங்களாக தற்காலிக பணி நீக்கத்தில் இருந்த நெல்லை அரசு தானியங்கிப் பணிமனையில் பணி புரிந்த தோழர்.முருகனின் தத்காலிக பணி நீக்கம் விலக்கிக் கொள்ளப்பட்டது, இது ஜn க்டோஜியோ போராட்டக் குழுவிற்கு கிடைத்த வெற்றி. ஜாக் டோ-ஜியோ 10 நாள் வேலை நிறுத்தம் ஒரு அரசு ஊழியர் ஒரு ஆசிரியருக்குக் கூட ஒரு சிறு சிராய்ப்பு கூட இல்லை. ஆனால் மூன்று அரசு ஊழியர் ஆசிரியர்களை இப் போராட் டத்தில் இழந்துள்ளோம். மாறாக அரசின் கரங்களில் இருந்து அக்டோபர் 2018 முதல் ஊதிய மாற்றம் பெற்றிதின் பயனாக 14000 கோடியைப் பறித்துள்ளோம். ஒரு கணம் நினைத்துப் பாருங்கள் 10 நாட்கள் வேலை நிறுத்தத்தில் 50% அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் பங்கேற்ற வேலை நிறுத்தம் இவ்வளவு பெரிய தொகையை பெற்றுக் கொடுத்துள்ளது. அனைவரும் ஒன்றிணைந்து *மே 8 கோட்டை முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்றால் புதிய பென்சன் திட்டம் ரத்தாகும் இடைநிலை ஆசிரியர் உள்ளிட்ட ஊதிய முரண்பாடு சரி செய்யப்படும் சிறப்பு காலமுறை ஊதியம் ஒழிக்கப்பட்டு வரைwறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் பெறப்படும் 21 மாத நிலுவைத் தொகை பெறப்படும். இதற்கு ஒவ்வொரு அரசு ஊழியரும் ஆசிரியரும் இன்றே ரூ.1000 ஒதுக்கீடு செய்து சென்னை முற்றுகைப் போராட்டத்திற்கு தயாராவீர். உரிமைகளைப் பெற்று வீடு திரும்ப
சபத மேற்பர்.

 புறப்படுவர்

போர் முரசு
 கொட்டி.


 இவண்.
TNHHSSGTA

மே 8



















கோட்டை முற்றுகைப் போராட்டம்....
வேட்கையோடு விரைந்து வாரீர்...!
அரசு ஊழியர்காள்
ஆசிரியப் பெருந்தகையீர்....!
சிந்தனை செய்வீர்
ஒருகணம்...!!
சிந்திய உழைப்பின் கனிகளை
பந்திபிரித்துத் தின்றவரை
சந்தி வந்து கேட்பீர்...
புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை
சங்கத்தின் துணையொடு
சாடிடுவீர்...
ஓட்டிடுவீர்...!
சாதனை செய்யப் பயந்தவர் எவரும்
வேதனை கொண்டே வாழ்வது திண்ணம்...!
எழுச்சிகொண்ட தமிழகத்தில் பிறந்த நீவிர் வீழ்ச்சி கொள்ளலாமா..?
தளர்ச்சியின்றி விரைந்து வாரீர்..!
பத்தோடு ஒன்றாய்ப் பரிணமிக்காமல் பத்துக்கு ஒன்றாய்ப் பரிணமித்திடுவீர்...
புரட்சிப்பாதையில் பயணத்தைத் தொடங்கிடுவீர்...!
மானிட சமுத்திரம் நாமென்று கூவிடுவீர்...!
எங்கும் பாரடா இப்புவி மக்களையென்று
ஓங்கும் குரலில் உரக்க முழங்கிடுவீர் மே8இல்..!
தன்பெண்டு,
"தன்பிள்ளை,சோறு
வீடு. சம்பாத்திம்
இவையுண்டு,
தானுண்டு என்போன்
சின்னதொரு கடுகினைப்போல் உள்ளம்கொண்டோன்"
பாரதிதாசன் படைப்பிதனில்
தன்னலத்தைச் சாடியதைப் படித்திருப்பீர்...
சுயநலத்தைத் துறந்திடுவீர்...
பொதுநலத்தைப் போற்றிடுவீர்...!
புதிய ஓய்வூதியத் திட்டம்...
நதியினை இணைத்தாற்போல.. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தாற்போல..
சுதந்திரம் என்பது சும்மா கிடைக்கவில்லை
"தண்ணீர் விட்டா வளர்த்தோம்....
கண்ணீராற் காத்தோம் கருகத் திருவுளமோ...?"
பாடினானே பாரதி
செக்கிழுத்த செம்மலைச் சிந்தையில் நிறுத்துங்கள்...!
அண்ணல் காந்தியடிகளின் சத்தியாகிரகத்தை
தண்டி யாத்திரையை ...
சிந்தியுங்கள் ஒரு நிமிடம்..!
கொடிகாத்த குமரனை
நாடு போற்றியது எதற்காக...?
வேலுநாச்சியாரை வீரமங்கை என்றதும் எதற்காக?
இந்திராகாந்தியை இன்றளவும்
இதயத்தில் கொண்டது எதற்காக..?
கல்பனா சாவ்லாவை கண்ணிமைபோல்
போற்றுவதும் எதற்காக?
எதற்காக..?எதற்காக..?
நாட்டிற்கு நல்லது செய்வோரை
ஏற்றிவைத்தது இவ்வுலகு...!
இன்று...
கடமையைச் செய்துவிட்டு
உரிமையைக் கேட்பதற்குத்
தயங்கலாமா தோழர்களே...
தோழியரே...!
விரைந்திடுவீர் சென்னைநோக்கி..
சென்னை
மாகாணம் சிலிர்க்கட்டும் உம் வரவுகண்டு...!
வீரம்கண்டு...!!
படித்தவரே பயந்துவாழ்ந்தால்
அடித்தளமிடுவோர் யார்தான் இப்புவியில்...?
கண்ணெணப் போற்றிக் கடமையைச் செய்வோரே...!
உரிமையை மீட்க உம் உள்ளம் விழையட்டும்..!
மனமிருந்தால் மார்க்கம் உண்டு..
உம் மனமிருந்தால்
தாக்கமும் உண்டு..!
பெண் ஆசிரியத் தோழிகளே...!
பொறுத்தது போதும்...
பொங்கி
யெழுவோம்...
நாளைய உலகம்
நம் வீரத்தைப் போற்றட்டும்...!
மதுரையில் நீதிகேட்ட கண்ணகிபோன்று
சென்னையில் நீதிகேட்போம் கண்ணகியாய் நின்று..!
ஒருத்தியாம் கண்ணகியைக் காணாத தேசம்
ஓராயிரம் கண்ணகியைக் கண்டு ஓடட்டும்..!
CPSஐ ஓட்டட்டும்...!
பழைய ஓய்வூதியத் திட்டத்தைப் புதிய
விதியாய்ப் படைக்கட்டும்..!
இனியொரு விதிசெய்யப் பிறந்தவள் இவளென்று
பாரததேசமே நம்மைப் புகழட்டும்
போற்றட்டும்...!
புறப்படுவீர் சென்னைநோக்கி..
புறம்காணட்டும்  நம் ஒற்றுமைநோக்கி..
புறம் ஓடட்டும் நம் நீதியின் முன்பு..!
பழைய பென்சன் திட்டத்தைப் படைத்திட படைதிரள்வீர்...!!
விடை பெறும்....

இனிய பட்டதாாி ஆசிாிய பெருமக்களே




இனிய பட்டதாாி ஆசிாிய பெருமக்களே

மிகப் பெரிய மாற்றத்தையே புரட்சி என்கிறாா்கள்

உலக வரலாற்றில் எந்த ஒரு புரட்சியும் மாற்றமும் ஒரு நாளிலோ ஒரே முயற்சியிலோ கிடைத்து விடுவது இல்லை . கிடைக்க செய்ய பலரின் தன்னலமற்ற முயற்சியும் , பெரும் எண்ணிக்கை கொண்ட மக்கள் திரட்சி திரட்டி நடத்தபடும் போராட்டங்களும் தேவைபடுகிறது

நமது முன்னோர்கள் தங்களுடைய தொடர் முயற்சியால் காவல் , வருவாய்துறைக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த ,
 பயன் அளிக்கும் ஓய்வூதிய திட்டத்தை.
1960 களுக்கு பிறகு ஆசிாியா்களுக்கும் தங்களின் அயராத போராட்ட குணத்தின் மூலம் பெற்று தந்து இருக்கிறாா் தன்னலமற்ற மூத்த  தோழர்கள்

ஆதனால் பெற்ற பெண்ணையும்  , son ஐயும் கூட இறுதி காலத்தில் நம்பி  வாழ வேண்டிய அவசியம் இல்லாமல் பென்ஷனை நம்பி இறுதி காலத்தை கழித்தாா்கள் ,.கழித்தும் வருகிறாா்கள்

2003 பிறகு நியமனம் பெற்றவர்களுக்களுக்கு

 பென்சன் இல்லை
 கமுட்டேசன் இல்லை
 கிரஜூட்டி இல்லை

நாம் அதற்கு முன்பு நியமனம் பெற்று விட்டோமே என இருந்து விடலாமா ?

CPS உள்ளவர்களே போராட்டங்களுக்கு வரமாட்டோம் என இருக்கிறாா்கள்.நான்.ஏன் போக வேண்டும் ?  என்கிற உங்கள் கோபப்படுவதிலும் நியாயம் இல்லாமல் இல்லை

நம் எதிர்கால சந்ததிகளுக்காக
நம் வீட்டு பிள்ளைகளுக்காக
இளைய தலைமுறை ஒருங்கிணைத்து போராட்டங்களத்துக்கு கொண்டு வாருங்கள்

சக்தி வாய்ந்த ஒற்றுபட்ட மே 8
போராட்டம் மட்டுமே நம் தலைமுறையையும்
எதிர்கால தலைமுறையுையும் பாதுகாக்கும்

★ மாணவர் எண்ணிக்கை குறைவு என காரணம் ஆசிாியா்கள் பணி நிரவல்

 *பணியிடங்கள் குறைப்பு
*
 பதவி இறக்கம்

 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இன்மை

ஏழை எளியவர்கள் பயிலும் அரசு பள்ளிகளின் பாதுகாப்பு

என்கிற பொதுநலமும் தன்னலமும் கலந்த போராட்டத்தில் தனது பங்களிப்பினை செய்ய மே 8 சென்னை கோட்டை முற்றுகை போராட்டத்திற்கு ஆசிாியா்களை திரட்ட
பள்ளி அளவில்
 வட்ட அளவில்
திட்டமிடல் கூட்டங்களை நடத்தி வாகன.ஏற்பாடு பயணத்திட்டங்களை வகுத்திட வேண்டும்
காலம் குறைந்து விட்டது விரைந்து பணியாற்ற வேண்டிய காலமிது உணர்ந்து செயல்படுவோம்.

 வெற்றி நமதே

 அ.மாயவன் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்

 திண்டுக்கல் மு.முருகேசன் மாநில செய்தி *தொடர்பு செயலாளர் 

Thursday, 12 April 2018

காவேரி மேலாண்மை வாரியம்

மாவட்ட கழக அறிவிப்பு
====================

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க நம் பேரியக்க உடன்பிறப்புக்கள் இன்று (12-04-18)ஆண் ஆசிரியபெருமக்கள் கருப்பு சட்டையும் பெண் ஆசிரியபெருமக்கள் கருப்பு சேலையும் கட்டி தமிழகம் முழுமையும் சோறுபோடும் விவசாயிகளுக்காக கருப்பு தினம் அனுசரிக்க அணியவேண்டுமாய் நம் பேரியக்கம் கேட்டுக்கொள்கிறது.....

இவண்

திண்டுக்கல் மாவட்ட அமைப்பு
தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்



TNHHSSGTA-DGL-காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து. தாளையம் பள்ளி ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ்,உடை அணிந்து எதிர்ப்பை பதிவு செய்தனர்

கீரனுர் ....அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் 

அரசு மேல்நிலைப்பள்ளி, இரா.வெள்ளோடு, குஜிலியம்பாறை ஒன்றியம்.


"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு""எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர் ஒன்றாக இணைந்தோம்"






செல்மா பிரியதர்ஸன் மாவட்டச் செயலாளர்

செல்மா பிரியதர்ஸன்
மாவட்டச் செயலாளர்
தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்
💪💪💪💪💪💪💪💪

திண்டுக்கல் மாவட்ட தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவில் நமது உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகமும் உறுப்பு அமைப்பாகும்.

கடந்த காலங்களில்  நீட் தேர்வு, ஜல்லிக்கட்டு, போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் உள்ளிட்ட பல பொதுப் பிரச்சினைகளுக்கு இவ்வமைப்போடு இணைந்து களம் கண்டிருக்கிறோம் என்பது தாங்கள் அறிந்ததே.

காவேரி மேலாண்மை அமைக்காமல் தமிழகத்தை வஞ்சித்து வரும் மத்திய அரசை கண்டித்து தமிழகமே கொந்தளித்து நிற்கும் வேலையில் நாமும் இக் கூட்டு நடவடிக்கைக் குழுவின் சார்பில் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாம் நமது பொருளாதாரக் கோரிக்கைக்காக மட்டும் குரல் கொடுப்பவர்கள் அல்ல.

தமிழக விவசாயிகளை
தமிழ் மாநிலத்தின் உரிமைகளை பாதுகாக்க நடைபெறும்
 இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பங்கேற்று முழக்கமிடுவோம்

நாள்   - 11.04.18 புதன்
நேரம் மாலை 5.30 - 7.00
இடம்  பேருந்து நிலையம் அருகில் நீதி மன்ற வளாகம் பின்புறம். திண்டுக்கல் ஒன்றிய அலுவலகம் முன்பு.










திண்டுக்கல் மு.முருகேசன் மாநில செய்தி தொடர்பு செயலாளர் 12.04.18

திண்டுக்கல் மு.முருகேசன் 
மாநில செய்தி தொடர்பு செயலாளர்
தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்
(நிறுவனர்: அ.மாயவன் Ex.MLC அவர்கள்)

⚫⚫ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும், தமிழக சட்டசபைக்கும் தேர்தல்?அடுத்த ஆண்டு நடத்த சட்ட கமிஷன் சிபாரிசு

⚫⚫பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் : ஒரு மதிப்பெண் விடைகளுக்கு தேர்வுத்துறை கடும் கட்டுப்பாடு

⚫⚫DGE-மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வு-மார்ச் 2018- மதிப்பீட்டு பணி-கணினிஅறிவியல் பாடத்திற்கான விடைத்தாட்கள் எண்ணிக்கை குறைத்தல் சார்பு

⚫⚫ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும், தமிழக சட்டசபைக்கும் தேர்தல்?அடுத்த ஆண்டு நடத்த சட்ட கமிஷன் சிபாரிசு

⚫⚫பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் : ஒரு மதிப்பெண் விடைகளுக்கு தேர்வுத்துறை கடும் கட்டுப்பாடு

⚫⚫ப்ளஸ் 2 : விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம்

⚫⚫கோயிலுக்கு ஜீன்ஸ் அணிந்து செல்லத் தடை!பெங்களூர் ராஜ ராஜஸ்வரி கோயில்

⚫⚫உங்கள் 14 ஆண்டு ஃபேஸ்புக் வாழ்க்கையை ஒரே க்ளிக்கில் டவுன்லோடு செய்யலாம்... உஷார்

⚫⚫ஐந்து மாநிலங்களில் ஆன்லைன் பில் வசதி

⚫⚫இரவில் பேரிச்சம்பழம் உண்பதால் இவ்வளவு நன்மைகளா !.வயிறு பிரட்சணைகள்,எலும்பு பலம்,ரத்தசோகை நிவாரணம் அடைதல்

⚫⚫வேலைவாய்ப்பு: தேசிய சிறு தொழில்கள் கழக லிமிடெட்டில் பணி!

⚫⚫பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சி குறித்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்!!!

⚫⚫6, 9ம் வகுப்புக்கு தரம் உயர்த்தப்பட்ட புதிய பாடப்புத்தகங்கள் தயார்!!!*

⚫⚫EXIM வங்கியில் பி.டெக்/பி.எல்.பட்டதாரிகளுக்கு வேலை!!

⚫⚫நறுமணப் பொருட்கள் வாரியத்தில் பட்டதாரிகளுக்கு வேலை!!!

⚫⚫ அரசு ஊழியர்கள் வீட்டுக்கடன் பெறுவதற்கான நிபந்தனைகள் தளர்வு: தமிழக அரசு!!

⚫⚫மாணவர் சேர்க்கை படிவத்தில் சர்ச்சைக்குரிய கேள்வி!!!

⚫⚫அங்கன்வாடி மையங்களுக்கு கோடை விடுமுறை அனுமதித்து அரசாணை வெளியீடு !

⚫⚫எரிவாயு உருளை விநியோகம் செய்யும் போது, பில் தொகைக்கு மேல் வாங்க கூடாது-வட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரின் குறிப்பாணை!!

⚫குறள் எண்: 689 / பொருட்பால் / தூது

விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்
வாய்சேரா வன்க ணவன்

 தன் அரசன் சொல்லி விடுத்த செய்தியை வெற்றரசரிடம் சென்று கூறுபவன் தனக்கு நேரக்கூடிய தீங்கிற்கு அஞ்சி, வாய் தவறியும் தன் அரச்னுக்குப் பழிப்படும் சொற்களைச் சொல்லாத திண்ணிய நெஞ்சனாம்.

His faltering lips must utter no unworthy thing, Who stands, with steady eye, to speak the mandates of his king. He alone is fit to communicate (his sovereign's) reply, who possesses the firmness not to utter even inadvertently what may reflect discredit (on the latter).

திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் நகர தொழிற் சங்க இணைப்புக்குழு சார்பாக காவிரி மேலாண்மை குழு அமைக்க வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது...

Tuesday, 10 April 2018

திண்டுக்கல் மு.முருகேசன் மாநில செய்தி தொடர்பு செயலாளர் 11.04.18

திண்டுக்கல் மு.முருகேசன்
மாநில செய்தி தொடர்பு செயலாளர்
தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்
(நிறுவனர்: அ.மாயவன் Ex.MLC அவர்கள்)

⚫⚫அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரி இடத்தில் பணிபுரிவோர் ஓய்வு பெற்ற பிறகு பணியிடம் மீண்டும் நிரப்பப்படக்கூடாது

⚫⚫வேலை நிறுத்தம் தொடர்பாக ஆசிரியர்கள் ஆலோசனை கூட்டம்!!!

⚫⚫தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கத் தேர்தல் நிறுத்தம்!!!

⚫⚫கூட்டுறவு தேர்தலுக்கு தடை : குழப்பத்தில் அதிமுக!!!*

⚫⚫போர்களமானது அண்ணா சாலை - சேப்பாக்கம் செல்லும் சாலைகள்

⚫⚫IPL நிர்வாகம் அதிர்ச்சி காலியாக கிடக்கும் மைதானம்!!!

⚫⚫DEE PROCEEDINGS-தொடக்கக்கல்வி-RTE 2009-ன் ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரத்தின் அடிப்படையில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்போது உபரி இடத்தில் பணிபுரிவோர் ஓய்வு பெற்ற பிறகு பணியிடம் மீண்டும் நிரப்பப்படக்கூடாது-துறைக்கு சரண் செய்தல் சார்பு!!!

⚫⚫ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு புதிய தலைவர் நியமனம்!

⚫⚫இடைநிலை ஆசிரியர்களுக்கு சமவேலைக்கு சம ஊதியம் கோரி மே மாதம் சென்னையில் போராட்டம் நடத்த திட்டம்!!!

⚫⚫தமிழகம் உள்பட 19 மாநிலங்களில் அடுத்த ஆண்டு தேர்தல்: சட்ட ஆணையம் பரிந்துரை

⚫⚫17 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்*

⚫⚫மாநில திட்ட பாடப்பிரிவில் மாணவர் சேர்க்கை குறையும் அபாயம் !

⚫⚫புத்தக வினாக்களால் எளிதாக இருந்தது கணிதம் :தேனி 10ம் வகுப்பு மாணவர்கள் கருத்து

⚫⚫ஒரே நாளில் 'நீட்', டி.என்.பி.எஸ்.சி. கல்வி அதிகாரிகள் அதிர்ச்சி

⚫⚫பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் இன்று துவக்கம்

⚫⚫சென்னையில் சி.பி.ஐ. போலீசார் அதிரடி நடவடிக்கை கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் கைது

⚫⚫10வது கணிதத் தேர்வில் திணறிய மாணவர்கள்!

⚫⚫கருப்பு பேட்ஜ் அணிந்து வந்த தலைமை செயலக ஊழியர்கள்

⚫⚫பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களை ஆய்வு செய்ய ஆட்சியர் உத்தரவு

📌குறள் எண்: 683 / பொருட்பால் / தூது

நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு

 வேற்படையுடைய வேற்றரசரிடம் சென்று தன் அரசனுக்கு வெற்றி தரும் வினையைச் சொல்பவனுக்கு இலக்கணமாவது அரசியல் நூலை அறிந்தவர் எல்லாரினும் தான் அந்நூலறிவில் சிறந்தவனாயிருத்தலாம்.

Mighty in lore amongst the learned must he be, Midst jav'lin-bearing kings who speaks the words of victory. To be powerful in politics among those who are learned (in ethics) is the character of him who speaks to lance-bearing kings on matters of triumph (to his own sovereign).

Monday, 9 April 2018

பங்கிம் சந்திர சட்டர்ஜி மறைந்த தினம்


THHHSSGTA ..திண்டுக்கல் ..நினைவு கூறல்

இன்று நினைவு நாள்:- ஏப்ரல்:-08

'வந்தேமாதரம்' பாடலை இயற்றியவரும், சிறந்த இலக்கியவாதியுமான- பங்கிம் சந்திர சட்டர்ஜி   மறைந்த தினம்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

💥வங்காளத்தின் வடக்கு பர்கானாஸ் மாவட்டம் காண்டல்படா கிராமத்தில் (1838) வசதியான குடும்பத்தில் பிறந்தார்.

💥மிட்னாப்பூர் கான்வென்ட் பள்ளியில் சேர்ந்தார். இளம் வயதிலேயே இயற்கைக் காட்சிகளில் மனதைப் பறிகொடுத்தார்.

💥வங்காளம், சமஸ்கிருதம், ஆங்கிலத்தில் புலமை பெற்றார்.
பள்ளியில் படிக்கும்போதே வங்கமொழியில் கவிதைகள் எழுதினார்.

💥இவரது கவிதைத் தொகுப்பு 'லலிதா ஓ மானஸ்' என்ற தலைப்பில் வெளிவந்தது.

💥ஆங்கிலத்தில் 'ராஜ்மோகன்ஸ் ஒய்ஃப்' என்ற கதையை எழுதினார்.

💥கல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார்.

💥துணை மாஜிஸ்திரேட்டாகப் பணியாற்றினார். சட்டப் படிப்பிலும் தேர்ச்சி பெற்றார்.

💥இந்திய நாகரிகம், கலாச்சாரத்தை மக்கள் மதிக்காததால்தான் அந்நியர்கள் மனம்போனபடி நடக்கின்றனர் என கருதினார்.

💥இலக்கியத்தின் வாயிலாக, இந்தியக் கலாச்சாரத்தின் பெருமைகளை மக்களுக்கு உணர்த்தும் முனைப்புகளை மேற்கொண்டார்.

💥அதுவரை ஷேக்ஸ்பியர், மில்டர், ஷெல்லியைப் படித்துவந்த படித்த இளைஞர்கள், புராணம், உபநிஷதங்கள், பகவத்கீதை படிக்கத் தொடங்கினர்.

💥நமது இலக்கியம், மொழி, வரலாறு குறித்து விழிப்புணர்வும், பெருமிதமும் மக்கள் மத்தியில் பரவியது.

💥முதல் நாவலான 'துர்கேஷ் நந்தினி' 1865-ல் வெளிவந்தது. அடுத்தடுத்து, பல நாவல்கள் வெளிவந்து வங்க இலக்கியத்துக்கு வளம் சேர்த்தன.

💥'வங்க தர்ஷன்' என்ற இலக்கிய இதழை 1872-ல் தொடங்கினார். இவர் உட்பட பல படைப்பாளிகளின் நாவல்கள், கதைகள், நகைச்சுவை சித்திரங்கள், வரலாற்றுக் கட்டுரைகள், இலக்கிய விமர்சனங்கள் அதில் வெளியாயின.

💥எளிய, சரளமான நடையால் அனைவரையும் ஈர்த்தார். இவரது கதைசொல்லும் பாணி தனித்துவமானது.

💥இவரது அனைத்து படைப்புகளும் ஏறக்குறைய இந்தியாவின் அனைத்து முக்கிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

💥'வங்காள எழுத்தாளர்களின் குரு, வங்க வாசகர்களின் நண்பர் பங்கிம்' என்பார் தாகூர்.

💥தாய்மொழி மீது மிகுந்த பற்று, பக்தி கொண்டவர். மதம், சமூகம், நடப்பு நிகழ்வுகள் குறித்து ஏராளமான கட்டுரைகள் எழுதினார். தனது படைப்புகள் வாயிலாக தேசிய உணர்வை மக்களிடம் எழுப்பினார்.

💥1882-ல் வெளிவந்த 'வந்தேமாதரம்' பாடல் இடம்பெற்ற இவரது 'ஆனந்தமடம்' நாவல் நாடு முழுவதும் புகழ்பெற்றது.

💥கல்கத்தாவில் 1896-ல் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் இப்பாடல் பாடப்பட்டது. 'தாயை வணங்குவோம்' என்று பொருள்படும் 'வந்தேமாதரம்' கோஷம் இந்திர சுதந்திரப் போராட்ட வீரர்களின் தாரக மந்திரமாக மாறி, நாடு முழுவதும் ஒலித்தது.

💥இது ஆங்கில அரசை நடுநடுங்க வைத்தது. வன்முறையைத் தூண்டுவதாக கூறி இந்த கோஷத்தை அரசு தடை செய்தது. பின்னர் இப்பாடல் இந்திய தேசத்தின் கீதமாகப் புகழ்பெற்றது.

💥 நவீன வங்க இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளியாகப் போற்றப்படும் பங்கிம் சந்திர சட்டர்ஜி 56-வது வயதில் (1894) நோய்வாய்ப்பட்டு காலமானார்


சர்வதேச மகளிர் தின கருத்தரங்கம்

தமிழ் நாடு பெண் ஆசிரியர்கள் ஒருங்கிணைப்புக்குழு
-+---+---+-+---++-----+-+++
சர்வதேச மகளிர் தின
கருத்தரங்கம்
********* இடம்
         நவஜீவன்டிரஸ்ட்
        வீரமாணிக்கபுரம்
நாள் 15-04-2018
***"******
வீரம் நிறைந்த
 மண்ணில்
வீர மங்கையாய்
 மலர்ந்தோம்
விவேக மாதராய்
வளர்ந்தோம்
வெற்றி மகளாய்
உயர்வோம்

ஆணும் பெண்ணும்
 சமமே
ஆற்றலில் அறிவிலும்
வளமே
ஆதிக்கம் எதிர்க்கும்
களமே
ஆதலின் ஒருங்கிணைவோம்
 நாமே


வேம்பார்பட்டி கூட்டுறவு சங்க தேர்தலில் வெற்றி

வெற்றி !     வெற்றி !    வெற்றி !
    வேம்பார்பட்டி கூட்டுறவு சங்க தேர்தலில்  நமது இயக்க வேட்பாளர்கள்

திரு.முத்துப்பாண்டி

திருகுருராமன்

திருமதிஜெயா

  ஆகியோர் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர் இவர்களின் பணி சிறக்க   வாழ்த்துகிறது  THHHSSGTA  திண்டுக்கல் மாவட்ட கழகம்


இவண்
மு.முருகேசன்............. மாநில செய்தி தொடர்பாளர்
க. ஜெகதீஸ் குமார் .........மாவட்ட தலைவர்
செல்மா பிரியதர்சன் .......மாவட்ட செயலாளர்
தோ.பிரான்சிஸ் பிரிட்டோ......பொருளாளர்

TNHHSSGTA-DGL


கோட்டை முற்றுகை செய்தி
✍🏻 அன்பார்ந்த பட்டதாரி ஆசிரியர்களே வணக்கம்


ஏப்ரல் மாத இறுதியில் விடைத்தாள் திருத்தி முடித்து மே-8 தலைமை செயலகத்தை முற்றுகையிட திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து சுமார் 10 வாகனத்தில் பயணிக்க உள்ளோம்

👉🏻 ஆசிரிய பெருமக்கள் இன்றே தங்களது வருகையை பதிவு செய்ய  வட்டார பொறுப்பாளர்களிடம் தங்களது பெயர்களை கொடுத்து உறுதி செய்து கொள்ள வேண்டுகிறோம்

இவண்
மு.முருகேசன்------------------ மாநில செய்தி தொடர்பாளர்

க. ஜெகதீஸ் குமார் ---------மாவட்ட தலைவர்

செல்மா பிரியதர்சன்------ மாவட்ட செயலாளர்

தோ.பிரான்சிஸ் பிரிட்டோ----பொருளாளர்

16..வது அகில இந்திய மாநாடு(STFI)

இன்று(8-4-2018) சென்னையில் நடைபெற்ற அகில இந்திய மாநில அரசுஊழியர்கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற மாபெரும் பேரணியை -இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் வாழ்த்துகிறோம்......
அ.மாயவன்
STFI துணை தலைவர்

Saturday, 7 April 2018

TNHHSSGTA வாழ்த்துக்கள்


தங்கம் வென்ற தமிழன் 

 TNHHSSGTA திண்டுக்கல் மாவட்ட கழகம் சார்பில் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் 
Image result for satish sivalingam tamil nadu














Image result for sathish sivalingam






கோல்ட் கோஸ்ட்டில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் 3வது தங்கப்பதக்கத்தை வென்றார் வலுதூக்கும் வீரர் சதீஷ்குமார் சிவலிங்கம்.


77 கிலோ உடல் எடைப்பிரிவில் மொத்தம் 317 கிலோ எடைதூக்கி தங்கம் வென்று சாதனை படைத்து தமிழகத்துக்குப் பெருமை சேர்த்துள்ளார் வேலூரைச் சேர்ந்த சதீஷ் சிவலிங்கம்.
25 வயது சதீஷ் சிவலிங்கம் 4 ஆண்டுகளுக்கு முன்பாக கிளாஸ்கோவில் இதே எடைப்பிரிவில் தங்கம் வென்றதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் கிளாஸ்கோவில் இவர் மொத்தம் 328 கிலோ எடைத்தூக்கினார். ஸ்னாட்சில் 149 கிலோவும் கிளீன் அண்ட் ஜெர்க்கில் அப்போது 179 கிலோவும் தூக்கினார்.
ஆனால் இம்முறை ஸ்னாட்சில் 144 கிலோ மட்டுமே தூக்கினார். ஆனால் கிளீன் அண்ட் ஜெர்க்கில் 173 கிலோ தூக்கி தங்கப்பதக்கத்தை உறுதி செய்தார்.
இதுவரை காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா 3 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் வென்றுள்ளது. 

திண்டுக்கல் மு.முருகேசன் மாநில செய்தி தொடர்பு செயலாளர் 08.04.18

திண்டுக்கல் மு.முருகேசன்
மாநில செய்தி தொடர்பு செயலாளர்
தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்
(நிறுவனர்: அ.மாயவன் Ex.MLC அவர்கள்)

📌📌புதுக்கோட்டை மாவட்டத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி விடுமுறை அறிவிப்பு(உள்ளூர் விடுமுறை)...மாவட்ட ஆட்சியர்

📌தொடக்கல்வித்துறையில் 10 ஆயிரம் ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறைக்கு முன் பயிற்சி - அமைச்சர் செங்கோட்டையன்

📌📌பிராவோ அதிரடி - சென்னை சூப்பர் கிங்ஸ் த்ரில் வெற்றி

📌📌பிளஸ் 2 விடைத்தாள் கட்டுகள் திருத்தும் மையங்களுக்கு வந்தன: திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் வெளியிட நடவடிக்கை

📌📌காமன்வெல்த் போட்டி: கால் வலியுடன் போராடி தங்கம் வென்றார் சதீஷ்குமார்

📌📌வரும் 2022 முதல்  விண்வெளியில் சொகுசு ஹோட்டலில் தங்கலாம்

📌📌உதவி பேராசிரியரை பணி நீக்கம் செய்து தமிழகஅரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

📌📌TET 2013 - தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்க அரசு பரிசீலனை

📌📌அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலையில் இட ஒதுக்கீடு வழங்க கூடாது- உயர்நீதிமன்றம்!

📌📌கூட்டுறவு சங்க தேர்தல் 2018- புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக்ககுழு இயக்குநர்கள்,தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்கள் பதவியேற்றல் சார்பு

📌📌மத்திய அரசின் இரண்டு கல்வி திட்டங்கள், ஒன்றாக இணைக்கப் படுவதால், மத்திய, மாநில அரசுகளுக்கு, பல கோடி ரூபாய் செலவு குறையும்

📌📌இலவச இளநிலை பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு!

📌📌ஒரு நாளைக்கு 20 நிமிடங்கள் இலவசமாக கிடைக்கும் ‘அம்மா வை-பை’ வசதியை எப்படி பயன்படுத்துவது

📌📌வேலைவாய்ப்பு: தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் பணி!

📌📌இரு கல்வி திட்டங்கள் இணைப்பு வீண் செலவை குறைக்க ஏற்பாடு!!!*

📌📌பிளஸ் 1 மாணவர்களுக்கும், 'நீட்' இலவச பயிற்சி அரசு, அரசு உதவி பள்ளிகளுக்கு, 'ஜாக்பாட்

📌📌நீட்' பயிற்சி மாணவர் உணவு செலவு 'கையை பிசையுது' கல்வி துறை!!!

📌📌TNPSC தேர்வுகள் மூலம் 320 சிவில் நீதிபதிகள் நேரடி நியமனம்:விரைவில் அறிவிப்பு வெளியாகிறது*


📌குறள் எண்: 601 / பொருட்பால் / மடியின்மை

குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும்

 தான் பிறந்த குடியாகிய நந்தா விளக்கு, சோம்பல் என்னும் தூசி படிவதால் ஒளி மழுங்கிக் கெடும்.

Of household dignity the lustre beaming bright, Flickers and dies when sluggish foulness dims its light. By the darkness, of idleness, the indestructible lamp of family (rank) will be extinguished.

அரசு மேல்நிலைப் பள்ளி, வீ. கூத்தம்பட்டி.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து தமது எதிர்ப்பை
100 % தெரிவித்த எமது ஆசிரிய உடன்பிறப்புக்கள்!      அரசு மேல்நிலைப் பள்ளி,  வீ.  கூத்தம்பட்டி.       




பிள்ளையார்நத்தம்  அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் 

மாநில கழகம் சுற்றறிக்கை

மாநில கழகம் சுற்றறிக்கை


      அனைத்திந்திய மாநில அரசு ஊழியர்கள் கூட்டமைப்பின் 16-வது அகில இந்திய தேசிய மாநாடு சென்னையில் நடைபெறுகிறது.நிறைவு நாளான 08.04.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4 மணிக்கு சென்னை அண்ணாசாலையில் அண்ணாசிலையிலிருந்து மாபெரும் பேரணி துவங்கவுள்ளது. அப்பேரணியில் STFI சார்பிலும நம் பேரியக்கத்தின் சார்பிலும் ஏராளமான ஆசிரியபெருமக்கள் கலந்துகொள்கின்றார்கள்...குறிப்பாக சென்னை,காஞ்சீபுரம்,திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நம் ஆசிரியபெருமக்கள் பேரணியில் கலந்துகொண்டு சேப்பாக்கத்தில் நடைபெறும் பொதுமாநாட்டையும் சிறப்பிக்கும்படி கனிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்......

இவண்

 அ.மாயவன்
STFI துணை தலைவர்
மற்றும்
TNHHSSGTA-நிறுவனத்தலைவர்

 எஸ்.பக்தவச்சலம்
மாநில தலைவர்,

 தி.கோவிந்தன்
மாநில பொதுச்செயலாளர்

பாஸ்கரன்
மாநில பொருளாரர்

மற்றும்

மாநில நிர்வாகிகள்

தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்