கோட்டை முற்றுகைப் போராட்டம்....
வேட்கையோடு விரைந்து வாரீர்...!
அரசு ஊழியர்காள்
ஆசிரியப் பெருந்தகையீர்....!
சிந்தனை செய்வீர்
ஒருகணம்...!!
சிந்திய உழைப்பின் கனிகளை
பந்திபிரித்துத் தின்றவரை
சந்தி வந்து கேட்பீர்...
புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை
சங்கத்தின் துணையொடு
சாடிடுவீர்...
ஓட்டிடுவீர்...!
சாதனை செய்யப் பயந்தவர் எவரும்
வேதனை கொண்டே வாழ்வது திண்ணம்...!
எழுச்சிகொண்ட தமிழகத்தில் பிறந்த நீவிர் வீழ்ச்சி கொள்ளலாமா..?
தளர்ச்சியின்றி விரைந்து வாரீர்..!
பத்தோடு ஒன்றாய்ப் பரிணமிக்காமல் பத்துக்கு ஒன்றாய்ப் பரிணமித்திடுவீர்...
புரட்சிப்பாதையில் பயணத்தைத் தொடங்கிடுவீர்...!
மானிட சமுத்திரம் நாமென்று கூவிடுவீர்...!
எங்கும் பாரடா இப்புவி மக்களையென்று
ஓங்கும் குரலில் உரக்க முழங்கிடுவீர் மே8இல்..!
தன்பெண்டு,
"தன்பிள்ளை,சோறு
வீடு. சம்பாத்திம்
இவையுண்டு,
தானுண்டு என்போன்
சின்னதொரு கடுகினைப்போல் உள்ளம்கொண்டோன்"
பாரதிதாசன் படைப்பிதனில்
தன்னலத்தைச் சாடியதைப் படித்திருப்பீர்...
சுயநலத்தைத் துறந்திடுவீர்...
பொதுநலத்தைப் போற்றிடுவீர்...!
புதிய ஓய்வூதியத் திட்டம்...
நதியினை இணைத்தாற்போல.. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தாற்போல..
சுதந்திரம் என்பது சும்மா கிடைக்கவில்லை
"தண்ணீர் விட்டா வளர்த்தோம்....
கண்ணீராற் காத்தோம் கருகத் திருவுளமோ...?"
பாடினானே பாரதி
செக்கிழுத்த செம்மலைச் சிந்தையில் நிறுத்துங்கள்...!
அண்ணல் காந்தியடிகளின் சத்தியாகிரகத்தை
தண்டி யாத்திரையை ...
சிந்தியுங்கள் ஒரு நிமிடம்..!
கொடிகாத்த குமரனை
நாடு போற்றியது எதற்காக...?
வேலுநாச்சியாரை வீரமங்கை என்றதும் எதற்காக?
இந்திராகாந்தியை இன்றளவும்
இதயத்தில் கொண்டது எதற்காக..?
கல்பனா சாவ்லாவை கண்ணிமைபோல்
போற்றுவதும் எதற்காக?
எதற்காக..?எதற்காக..?
நாட்டிற்கு நல்லது செய்வோரை
ஏற்றிவைத்தது இவ்வுலகு...!
இன்று...
கடமையைச் செய்துவிட்டு
உரிமையைக் கேட்பதற்குத்
தயங்கலாமா தோழர்களே...
தோழியரே...!
விரைந்திடுவீர் சென்னைநோக்கி..
சென்னை
மாகாணம் சிலிர்க்கட்டும் உம் வரவுகண்டு...!
வீரம்கண்டு...!!
படித்தவரே பயந்துவாழ்ந்தால்
அடித்தளமிடுவோர் யார்தான் இப்புவியில்...?
கண்ணெணப் போற்றிக் கடமையைச் செய்வோரே...!
உரிமையை மீட்க உம் உள்ளம் விழையட்டும்..!
மனமிருந்தால் மார்க்கம் உண்டு..
உம் மனமிருந்தால்
தாக்கமும் உண்டு..!
பெண் ஆசிரியத் தோழிகளே...!
பொறுத்தது போதும்...
பொங்கி
யெழுவோம்...
நாளைய உலகம்
நம் வீரத்தைப் போற்றட்டும்...!
மதுரையில் நீதிகேட்ட கண்ணகிபோன்று
சென்னையில் நீதிகேட்போம் கண்ணகியாய் நின்று..!
ஒருத்தியாம் கண்ணகியைக் காணாத தேசம்
ஓராயிரம் கண்ணகியைக் கண்டு ஓடட்டும்..!
CPSஐ ஓட்டட்டும்...!
பழைய ஓய்வூதியத் திட்டத்தைப் புதிய
விதியாய்ப் படைக்கட்டும்..!
இனியொரு விதிசெய்யப் பிறந்தவள் இவளென்று
பாரததேசமே நம்மைப் புகழட்டும்
போற்றட்டும்...!
புறப்படுவீர் சென்னைநோக்கி..
புறம்காணட்டும் நம் ஒற்றுமைநோக்கி..
புறம் ஓடட்டும் நம் நீதியின் முன்பு..!
பழைய பென்சன் திட்டத்தைப் படைத்திட படைதிரள்வீர்...!!
விடை பெறும்....